தேனி: சூழல் சுற்றுலா மையக் கட்டடம்… பணியின்போது மேற்கூரை இடிந்து தொழிலாளி பலி ​- நடந்தது என்ன​?!

​மேகமலை வனஉயிரின சரணாலயத்தையும், ஶ்ரீ வில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் இணைத்து ​​கடந்த 2021-ம் ஆண்டு 62 ஆயிரத்து 626 ஹெக்டேர் வனப்பகுதிகளை உள்ளடக்கி​ ​​புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. ​இதனைத் தொடர்ந்து தேனி கே.ஆர்.நகரில் மாவட்ட வன அலுவலகம் அருகே ​​​ஸ்ரீ​ ​வில்லிபு​த்​தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் ​உருவாக்கப்பட்டது. 

கட்டடம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அலுவலகம் அருகே சூழல் சுற்றுலா தகவல் மையத்துக்கான கட்டடப் பணிகள் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது கட்டடத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. ​இந்நிலையில் ​நேற்று காலை​ நுழைவுவாயில் பகுதி மேற்கூரையில் கட்டட பூச்சு வேலை ​நடந்தது. இப்பணியில் மாரிமுத்து(37) மற்றும் அசோக் (25) ​உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக நுழைவு வாயில் ​மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பெரியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து, அசோக் ஆகியோர் சிக்கி பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை​க்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை​யில் இருந்த மாரிமுத்து​ ​உயிரிழந்தார். காயமடைந்த அசோக் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 

விபத்து

இதுகுறித்து ​​ஸ்ரீ​ ​வில்லிபு​த்​தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்​ ஆனந்திடம் விசாரித்தோம். “கட்டட விபத்து குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து கொண்டிருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் சிறு கவனக்குறைவு தான் விபத்துக்கான காரணம் எனத் தெரிகிற​து. கட்டடப் பணியில் தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி கட்டடம் மிகவும் உறுதியாக ​இ​ருகிறது.​ விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கட்டடம் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். ​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.