பஸ் கவிழ்ந்து தமிழக பக்தர்கள் 62 பேர் காயம்| 62 Tamil Nadu devotees injured in bus overturn

பட்டனம்திட்டா, கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 62 பேர் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒன்பது குழந்தைகள் உட்பட 64 அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று, நேற்று தரிசனம் முடிந்த நிலையில் பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பினர்.

நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் வரும் போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினரும், போலீசாரும், உள்ளூர் மக்களின் உதவியுடன் பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பஸ் டிரைவர் உட்பட 62 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.