ரம்ஜான் சிந்தனைகள்-6| Ramadan Thoughts-6 | Dinamalar

ரம்ஜான் சிந்தனைகள்-6

நல்லவர்கள் நலமுடன் வாழ்வர்

நிம்மதியாக வாழ்பவர்கள் யார் என நபிகள் நாயகம் பட்டியல் இடுகிறார்.

*தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வழிபடுபவர் ஏமாற்றம் அடைய மாட்டார். பிறரையும் நேசிக்கும் இவர்கள் மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கப்பட்டு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வர். அதே சமயத்தில் தான் மட்டும் வாழ வேண்டும் என சுயநலத்துடன் இருப்பவர்களை இறைவன் கைவிடுவான்.

*ஒரு செயலில் ஈடுபடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் பெரும்பாலானோர் யோசிக்காமல் ஆடம்பர, வீண்விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஆடம்பரத்தை விட்டு வருமானத்திற்கு ஏற்ப சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொள்வது இன்னும் சிறப்பு.

*இரண்டு குடும்பங்களுக்கு இடையே அல்லது கணவன், மனைவிக்குள் இடையே பிரச்னை ஏற்படும் போது ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. நடுநிலை தவறாத நல்லவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:47 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.