வளரும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு..! இடையில் நிறுத்துவது ஏன்?

மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முதலீட்டின் நன்மைகளை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.

தொடரும் முதலீட்டு வளர்ச்சி..!

கடந்த ஏழு ஆண்டுகளில் எஸ்ஐபி மூலம் மூதலீடு செய்யப்பட்ட தொகை, வருட வளர்ச்சி விகிதம் 20% ஆகும். கடந்த இரண்டு வருடங்களில் இந்த வளர்ச்சி விகிதம் 30%, 25% வகையில் உள்ளது.  ஆம்ஃபி (AMFI) சேர்மனும், ஆதித்ய பிர்லா ஃலைப் மியூச்சுவல் ஃபண்ட் முதன்மை நிர்வாக அதிகாரியுமான ஏ.பாலசுப்பிரமணியன், இன்னும் மூன்று வருடங்களில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யப்படும் தொகை இரண்டு மடங்காக உயரும்’ என்று கூறியுள்ளனர்.

ஏ.பாலசுப்பிரமணியன்

அதாவது தற்போது மாதம் 13,000 கோடி ரூபாய் அளவில் எஸ்ஐபி வந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் இது மாதம் 26,000 கோடி அளவில் வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

புதுப்புது எஸ்ஐபி தொடங்குவோர் எண்ணிக்கை வளர்ந்து வரும் போது எஸ்ஐபி நிறுத்துவோர் எண்ணிக்கையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். புதிய எஸ்ஐபி தொடங்குவது போல் எஸ்ஐபி  நிறுத்தப்படுவதும் நடக்கிறது. உதாரணமாக 100  எஸ்ஐபி கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டால் 56  எஸ்ஐபி நின்று விடுகிறது. மீதம் 44 எஸ்ஐபி மட்டுமே தொடர்ந்து வருகிறது.

எஸ்ஐபி நிறுத்த காரணங்கள்..!

எஸ்ஐபி நிறுத்துவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம். தற்போது வங்கி டெபாசிட் வட்டி விகிதம் ஏறிக்கொண்டு வருகிறது. வீட்டுக் கடன் மாத இஎம்ஐ கூடி உள்ளது. எனவே சிலர் எஸ்ஐபியை நிறுத்துகிறார்கள். வங்கியில் வட்டி விகிதம் ஏறுவதால் எஸ்ஐபி-யில் முதலீடு செய்யாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணம் முதலீடு செய்ய சிலர் முயற்சிக்கலாம்.

கட்டுரையாளர்: மீ. கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

மேலும் தற்போது பணவீக்கம் அதிகமாகி வருவதாலும், பொருளாதார சிக்கலான சூழ்நிலையால் சந்தை தொடர்ந்து இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் எஸ்ஐபியை நிறுத்துவோர் சிலர் இருக்கலாம்.. இதுபோன்ற காரணங்களால் எஸ்ஐபி-ஐ நிறுத்துவோர் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக உள்ளது.

பொதுவாக, ஈக்விட்டி மற்றும் ஹைபிரிட் ஃபண்டுகளில் எஸ்ஐபி நிறுத்தப்படுகிறது. குறிக்கோளுடன் செய்யப்படும் முதலீடான ஓய்வூதிய முதலீடுகள் குழந்தை வளர்ப்புக்கான முதலீடுகள் பெரும்பாலும் நிறுத்தப்படுவதில்லை. இந்த வகையான முதலீடுகளில் 100 எஸ்ஐபி தொடங்கப்பட்டால் 75 எஸ்ஐபி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

முதலீடு செய்ய குறிக்கோள் தேவை..!

குறிக்கோளுடன் செய்யப்படும் முதலீடு எப்போதும் தொடரும் என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கண்கூடாக தெரிந்த தகவல் ஆகும்.  ஆக எப்படி பார்த்தாலும் வரும் காலங்களில் எஸ்ஐபி முதலீடு வளர்ந்து கொண்டு போகும் என்பது எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.