ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விழா மே 6ம் தேதி கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. 6, 7 ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படும்.  10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி கூடலூரில் மே 12ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.  18வது ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.

125வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடத்தப்படவுள்ளது. 63வது பழக் கண்காட்சி வரும் மே 27ம் தேதி துவங்கி 2 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.