எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி,  தேங்காய்திட்டு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்  (32). பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்பதற்காக இவர் உள்பட பலர் கடந்த 2 மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் உப்பளம் இந்திரா காந்தி  விளையாட்டு மைதானத்தில் ஓட்டப் பயிற்சியில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அப்போது  திடீரென நெஞ்சை பிடித்தபடி அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாலிபர்கள் அவரை மீட்டு அரசு  மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.