ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்..!!

வங்கி சேவைகள் நாட்டில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உபயோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும், ஆன்லைன் பேங்கிங், ஸ்மார்ட் பேங்கிங்க், மொபைல் பேங்கிக் போன்ற அம்சங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வேளையில், ஒரு சிலர் வங்கியை நாடி செல்வது உண்டு. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வழங்கும் மானியம், நிதி போன்றவைகளை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றன. இதனால் அனைவருக்குமே வங்கி சேவை என்பது கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மத்திய அரசும் அனைவருக்கும் வங்கி சேவையை அளிக்க ஜன்தன் கணக்குகள் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

தற்போது, ஜிபே, போன்பே போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் கூட இன்னுமே கிராமங்களில் வசிக்கும் மக்கள் வங்கிகளுக்கே சென்று நேரடியாகப் பணம் எடுக்கிறார்கள். 

இந்நிலையில், அடுத்த மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடியிருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

புனித வெள்ளி, ஈத் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள் என்று பல்வேறு விடுமுறை நாட்கள் வரும் ஏப்ரல் மாதம் வருகிறது என்பதால் சுமார் இரண்டு வாரங்கள் வரை வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்ட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், மொபைல் மற்றும் இணைய வங்கி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்:

ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): வங்கிக் கணக்கின் வருடாந்திர மூடல்

ஏப்ரல் 2, 2023 (ஞாயிறு): விடுமுறை

ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்

ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி

ஏப்ரல் 8, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 2வது சனிக்கிழமை

ஏப்ரல் 9, 2023 (ஞாயிறு) – விடுமுறை

ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீராபா / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா

ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்

ஏப்ரல் 16, 2023 (ஞாயிறு) – விடுமுறை

ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) – ஷப்-இ-கத்ர்

ஏப்ரல் 21, 2023 (வெள்ளிக்கிழமை) – ரம்ஜான்

ஏப்ரல் 22, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 4-வது சனிக்கிழமை

ஏப்ரல் 23, 2023 (ஞாயிறு) – விடுமுறை

ஏப்ரல் 30, 2023 (ஞாயிறு) – விடுமுறை. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.