கர்நாடகா தேர்தல்; பாஜகவிற்கு காத்திருக்கும் சிக்கல்.! என்ன ஆகும்.?

கர்நாடகா தேர்தலில், மக்களை வதைக்கும் பல்வேறு சிக்கல்கள் பாஜகவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா பாஜகவிற்கு ஏன் முக்கியம்.?

கர்நாடகாவில் பாஜகவில் மீண்டும் ஆட்சி அமைப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தென் இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். கடந்த முறை தேர்தலில் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த கர்நாடகா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. அதைத் தொடர்ந்து அந்த அரசின் ஆட்சி காலம் முடிவதற்குள், அக்கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சரமாரியாக பாஜகவிற்கு தாவினர். இதற்கு பாஜகவின் குதிரை பேரமே காரணம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் வரவிருக்கும் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கர்நாடகா தேர்தல் 2023

கர்நாடக தேர்தல் 2023: பாஜக தான் டாப்… ஆனா ஒரு பெரிய சிக்கல்- வெளியான சர்வே முடிவுகள்!

கர்நாடாகாவில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், ஏப்ரல் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, அதில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நிலவுகிறது.

கருத்து கணிப்பு

கர்நாடகாவில் கடந்த முறை போலவே இந்தமுறையில் தொங்கு சட்டசபை அமையும் என கூறப்படுகிறது. கர்நாடகா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். அதேபோல் இந்த முறையும் தொங்கு சட்டசபை அமையும் எனவும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்கோர் செய்யும் காங்கிரஸ்

காங்கிரஸின் வாக்குறுதிகள் தான் கர்நாடகா மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டை போலவே இல்லத்தரசிகளுக்கு 2000 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய், 200 யுனிட் வரை இலவச மின்சாரம், வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இன்னும் 12 நாட்கள் மட்டுமே!

பாஜகவிற்கு இருக்கும் சிக்கல்

அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிசன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், ஊழல் என பெரும்பான்மை மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் கர்நாடகா தேர்தலில் முக்கிய காரணியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.