கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ல் ஓட்டு எண்ணிக்கை| Karnataka Assembly elections will be held on 10th May; counting of votes on 13th May

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முதன்முறையாக வீட்டில் இருந்து ஓட்டுப்போடும் வசதி செய்யப்படும். 5.21 கோடி பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் – 2.62 கோடி, பெண்கள் – 2.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 9 .17 லட்சம் பேர் முதலில் ஓட்டுப்போட உள்ளனர். பெண்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துள்ளனர். தேர்தலுக்கு 58 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.

latest tamil news

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் – ஏப்.,13

கடைசி தேதி – ஏப்., 20

வேட்பு மனு பரிசீலனை – ஏப்.,21

வாபஸ் பெற கடைசி தேதி – ஏப்.,24

தேர்தல் நடக்கும் தேதி – மே 10(ஒரே கட்டமாக)

ஓட்டு எண்ணிக்கை – மே 13

அதே நாளில், ஒடிசா, உபி., மேகாலயா உள்ளிட்ட மாநிலங்காளில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.