கோலாகலமாக நடந்த வளைகாப்பு : மகிழ்ச்சியில் கண்மணி – நவீன்

சின்னத்திரை பிரபலங்களான கண்மணிக்கும் நவீனுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது வாழ்வில் மேலும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் கண்மணி விரைவில் தாயாகவுள்ளார். தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் கண்மணிக்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்துள்ளது. அதன் புகைப்படங்களை நவீன் மற்றும் கண்மணியின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களும் பிரபலங்களும் கண்மணி – நவீன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.