சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 3.38 கோடி வாகனங்கள் உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 20,127 அரசுப் பேருந்துகளும், 7,764 தனியார் பேருந்துகளும் இருப்பதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. 2.85 கோடி இருசக்கர வாகனங்களும், 33 லட்சம் மோட்டார் கார்களும் உள்ளதாகவும் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தது.
