நாடு முழுதும் உள்ள சிறைகளில் 472 மரண தண்டனை கைதிகள் | 472 death row inmates in prisons across the country

புதுடில்லி, நாடு முழுதும் உள்ள சிறைகளில், 472 மரண தண்டனை கைதிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறிய பதில்:

கடந்த 2021 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுதும் பல்வேறு சிறைகளில், 472 மரண தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 67 பேரும், பீஹாரில் 46 பேரும், மஹாராஷ்டிராவில் 44 பேரும், மத்திய பிரதேசத்தில் 39 பேரும் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர். இதுதவிர, 290 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.