20 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம்! என் பதவியின் இருண்ட நாள்..முன்னாள் ஜனாதிபதி ஒபாமா


அமெரிக்காவில் பாடசாலை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு, துப்பாக்கிச் சட்டத்தை மாற்றியமைக்க முடியாமல் போனது வருத்தம் அளித்ததாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம்

தற்போது நாஷ்வில்லேவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2012ஆம் ஆண்டு சாண்டி ஹூக் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மனம் திறந்துள்ளார்.

அந்த சம்பவத்தில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

20 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம்! என் பதவியின் இருண்ட நாள்..முன்னாள் ஜனாதிபதி ஒபாமா | Obama Open Up Tragedy Incident In Shool On 2012 

ஒபாமா வருத்தம்

இதுகுறித்து சிட்னியில் பேசிய ஒபாமா கூறுகையில், ‘துப்பாக்கிச் சட்டங்களை மாற்றாதது நான் மிகவும் கடினமாக முயற்சி செய்ததற்கு ஒரு உதாரணம் என்று நான் நினைக்கிறேன்..ஆனால் காங்கிரஸை எங்களால் அசைக்க முடியவில்லை.

நான் பதவியில் இருந்த ஆண்டுகளில், வெளிப்படையாக தெரிந்தவற்றை செய்ய மக்கள் ஒன்று சேர்வது போன்றவற்றைப் பற்றி நான் கவலைப்பட்டேன்’ என தெரிவித்தார்.

பராக் ஒபாமா/Barack Obama @Official White House Photo by Pete Souza

அத்துடன் அவர், சாண்டி ஹூக் பாடசாலை துப்பாக்கிச்சூடு நடந்த நாள் தனது ஜனாதிபதி பதவியின் ‘இருண்ட நாள்’ என்றும் குறிப்பிட்டார்.    

பராக் ஒபாமா/Barack ObamaSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.