அதிரடியாக சதம் விளாசிய 25 வயது வீரர்! மிரட்டலாக வெற்றி பெற்ற அணி


ஜெர்சி அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜான்டி ஜென்னர் 76

வான்டெர்ரெர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் நமீபியா மற்றும் ஜெர்சி அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஜெர்சி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜான்டி ஜென்னர் 76 ஓட்டங்களும், ஜோஷ் லாவ்ரென்சன் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.

நமீபியா தரப்பில் பென் ஷிக்கோங்கோ மற்றும் ட்ரம்பல்மேன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதிரடியாக சதம் விளாசிய 25 வயது வீரர்! மிரட்டலாக வெற்றி பெற்ற அணி | Namibia Beat Jersey By 8 Wkts @Twitter (ICC)

அபார சதம் விளாசிய இளம்வீரர்

அதன் பின்னர் களமிறங்கிய நமீபியா அணி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து கைகோர்த்த கேப்டன் எராஸ்மஸ் – மைக்கேல் வான் லிங்கன் வெற்றியை உறுதி செய்தனர்.

25 வயதான லிங்கன், 93 பந்துகளில் 110 ஓட்டங்கள் விளாசினார். அவரது சதத்தில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் எராஸ்மஸ் 87 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் எடுத்தார்.    

அதிரடியாக சதம் விளாசிய 25 வயது வீரர்! மிரட்டலாக வெற்றி பெற்ற அணி | Namibia Beat Jersey By 8 Wkts @Twitter (ICC)Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.