அதில் எனக்கு தொடர்பில்லை… சொந்த பிள்ளைகள் குறித்து லண்டன் தாயார் உருக்கம்


கிழக்கு லண்டனின் தேகன்ஹாம் பகுதியில் சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாயார் ஒருவர், தமக்கு அதில் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.

பிள்ளைகள் இருவரை கொன்றதாக

தேகன்ஹாம் பகுதியை சேர்ந்த 45 வயது காரா அலெக்சாண்டர் என்பவர் மீதே பிள்ளைகள் இருவரை கொன்றதாக கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது.
இவரது பிள்ளைகள் இருவர், மார்லி தாமஸ்(5), மற்றும் எலியா தாமஸ்(2) ஆகிய இருவரும் குடியிருப்பின் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

2022 டிசம்பர் 15 மதியத்திற்கு மேல், குறித்த சிறுவர்கள் இருவரும் கடைசியாக உயிருடன் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடுத்த நாள், சிறுவர்கள் தொடர்பில் நலம் விசாரிக்க வேண்டும் என பொலிசாருக்கு அவர்களின் தந்தையிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதில் எனக்கு தொடர்பில்லை... சொந்த பிள்ளைகள் குறித்து லண்டன் தாயார் உருக்கம் | London Mum Denies Murdering Her Two Sons

Image: MailOnline

மேலும், அவரே குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டதில், சிறுவர்கள் இருவரும் சடலமாக காணப்பட்டதை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் சேவை, அவசர மருத்துவ உதவிக்குழுவினரும் சிறார் இருவரின் மரணத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, சந்தேகத்தின் அடிப்படையில் தாயார் காரா அலெக்சாண்டர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாம் குற்றவாளி இல்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை மே மாதம் 18ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிபதி, இந்த வழக்கில் விசாரணை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.