திருவாரூர் ஆழித் தேரோட்டம் – ஊது குழல் விற்க தடை.!

திருவாரூர் மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற, சைவ தலங்களில் பழமை வாய்ந்த தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆழித் தேரோட்டம் அடுத்த மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அலங்காரம் செய்யப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். 300 டன் எடை கொண்ட இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தத் தேரில் உள்ள நான்கு இரும்பு சக்கரங்களிலும் திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இதுதான். இதனால், இந்த தேரோட்ட திருவிழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரரக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவிழா நேரத்தில் இளைஞர்கள் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஊதுகுழலை ஊதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் திருவாரூர் தேரோட்டத்தின் போது, அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஊதுகுழலை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.