பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி – குஷ்பு டுவீட்

சென்னை,

1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கென ரசிகர்கள் கோவில் கட்டிய கதையெல்லாம் நம் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர், தயாரிப்பாளர் உள்பட பன்முகங்களை கொண்ட குஷ்பு, அரசியலிலும் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி என டுவிட்டரில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

குஷ்பு டுவிட்டர் பதிவில், பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. திமுக எம்.பி.திருச்சி சிவா அவர்கள். உங்களைப் பார்ப்பதில் மிகவும் அற்புதம் என பதிவிட்டுள்ளார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.