பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மன் சென்றுள்ளார்.
மன்னராக அறிவிக்கப்பட்ட பின்னர் 3ஆம் சார்லஸ் தனது முதல் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பயண விபரங்கள்
இதனால் கடந்த 26 ஆம் திகதி மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று (29.03.2023) மன்னர் சார்லஸ் ஜெர்மன் சென்றடைந்தார்.
இதன்போது மன்னரை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளதுடன் அங்கு ஜெர்மன் பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மன்னர் சார்ல்ஸ் 31 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.