ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்: பெங்களூருவில் 4 பேர் கைது| Bengaluru Woman Dragged From Park, Gang-Raped In Moving Car

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண்ணை காருக்குள் இழுத்து, கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 25 ம் தேதி கோரமங்களாவில் என்ற இடத்தில் உள்ள தேசிய விளையாட்டு பூங்காவில் இரவு நேரத்தில், ஆண் நண்பர் ஒருவருடன் பெண் ஒருவர் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இருவரையும் அழைத்து இரவில் தனியாக பேசுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்.

உடனடியாக ஆண் நண்பர் அங்கிருந்து சென்ற நிலையில், அந்த நபர், மொபைல் மூலம் நண்பர்கள் 3 பேரை அழைத்துள்ளார். 3 பேரும் காரில் வந்தனர். அந்த பெண்ணை காரில் ஏற்றி நகர் முழுவதும் சுற்றி உள்ளனர். அப்போது 4 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு மறுநாள் அதிகாலை நேரத்தில் வீடருகே விட்டு சென்ற அவர்கள், சம்பவம் குறித்து போலீசில் தெரிவித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

latest tamil news

பாதிக்கப்பட்ட பெண், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசிலும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் சதீஸ், விஜய், ஸ்ரீதர், கிரண் என தெரியவந்துள்ளது. 2 பேர் தனியார் அலுவலகத்தில் தொழிலாளியாகவும், ஒருவர் கால் சென்டரிலும், மற்றொருவர் எலக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.