காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தபட்டு இரவு முழுவதும் 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம்

kaaபெங்களூரு

பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த இளம்பெண் கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி இரவு 9 மணியளவில் கோரமங்களாவில் உள்ள நேஷனல் ஹோம்ஸ் பார்க்கில் தன்னுடைய நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு காரில் 4 பேர் வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் திடீரென்று இளம்பெண்ணுடன் அமர்ந்திருந்த நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை இளம்பெண் தட்டி கேட்டதாக தெரிகிறது. பின்னர் இளம்பெண்ணை அங்கிருந்து 4 பேரும் காரில் கடத்தி சென்றுள்ளனர். அன்றைய தினம் இரவில் இருந்து மறுநாள் (26-ந் தேதி) அதிகாலை வரை பெங்களூரு நகர் முழுவதும் இளம்பெண்ணுடன் காரில் சுற்றியுள்ளனர்.

அப்போது காருக்குள் வைத்தே இளம்பெண்ணை 4 வாலிபர்களும் மாறி, மாறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில், இளம்பெண் பலத்தகாயம் அடைந்தார். அதன்பிறகு, கோரமங்களாவில் அந்த இளம்பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு 4 வாலிபர்களும் சென்று விட்டார்கள். கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண் காயம் அடைந்திருந்ததால், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று கோரமங்களா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வாலிபர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,பார்க் மற்றும் அதனை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது கிடைத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த 4 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் சதீஸ், விஜய், ஸ்ரீதர், கிரண் என்பதாகும். இவர்களில் 2 பேர் தனியார் அலுவலகம் ஒன்றில் தொழிலாளியாகவும், ஒருவர் கால் சென்டரிலும், மற்றொருவர் எலெக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணிடமும் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டாக கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.