பிரதமரின் பட்டப்படிப்பு குறித்த தகவல்: கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்த குஜராத் நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2016, ஏப்ரல் 28, அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி பட்டம் குறித்த தகவல்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையிடம் கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தின்  ஆணையர்  பேராசிரியர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஏப்ரல் 29, 2016 தேதியிட்ட தனது உத்தரவில், “முதல்வர் கெஜ்ரிவாலின்  கோரிக்கையைப்  பரிசீலிக்க வேண்டும்.

மோடி

முதல்வர் பதவியில் இருக்கும் ஒரு குடிமகன் பிரதமரின் கல்விப் பட்டம் தொடர்பான தகவல்களை அறிய விரும்பினால், அதை தெரிவிக்க வேண்டும். எனவே, பிரதமரின் பட்டப்படிப்பு குறித்தான தகவல்களையும், பிரதமர் மோடி பெயரில் உள்ள பட்டங்கள் தொடர்பான தகவல்களையும் தேடி வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்  பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியது.

இதை எதிர்த்து மே 4, 2016 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தில், “மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு அதிகாரமற்றது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று குஜராத் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்துவந்த நிலையில், இன்று குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அதில்,”பிரதமர் நரேந்திர மோடியின் பட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வழங்கத்தேவை இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு,  25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையைக் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் வழங்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.