பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி மரணம்! 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது


பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், முகமூடி அணிந்து வீட்டினுள் நுழைந்த 14, 15 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

82 வயது மூதாட்டி

Suffolkயில் உள்ள தனது வீட்டில் ஜாய் மிடில்டிச் என்ற 82 வயது மூதாட்டி வசித்து வந்தார். ஓய்வூதியத் தொகை மூலம் தன் வாழ்நாளை அவர் கடத்தி வந்தார்.

இந்த நிலையில், மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாய் மிடில்டிச்/Joy Middleditch 

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அப்போது தாக்குதலுக்கு உள்ளான ஜாய் மிடில்டிச், படுகாயமடைந்ததால் குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜாய் மிடில்டிச்/Joy Middleditch

சிறுவர்கள் கைது

இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் Lowestoft பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் விசாரணைக்காக மார்ட்லெஷாம் பொலிஸ் புலனாய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   

பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி மரணம்! 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது | 82 Year Old Woman Killed Teenagers Arrested Uk @Representative imageSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.