பெண்களுக்கு பிரச்சனை என்றதும்.. முதல் ஆளாக கலாஷேத்ரா வந்த விசிக விக்ரமன்! தரையில் அமர்ந்து போராட்டம்

சென்னை: கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை மாணவிகள் நடத்திய போராட்டத்தில் விசிக கட்சியை சேர்ந்த பிக்பாஸ் விக்ரமன் முதல் ஆளாக சென்று நேற்று இரவே கலந்து கொண்டார்.

கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆசிரியர்கள் அங்கே இருக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. திருவான்மியூரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது.

என்ன நடக்கிறது

இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் உட்பட 4 பேர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக புகார் கொடுத்த மாணவிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தவறு செய்தவர்கள்

தவறு செய்தவர்கள்

அதோடு தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும். நடன துறையின் தலைவர் ஜோஸ்லின் மேனன் தவறு செய்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கே மாணவிகள் இரவு முழுக்க போராட்டம் நடத்திய நிலையியல் அதிகாலையில் பலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று உறுதி அளித்துள்ளார்.

விக்ரமன்

விக்ரமன்

இந்த விவகாரத்தை இன்று விசிக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபையில் எழுப்பின. விசிக எஸ்.எஸ். பாலாஜி, தவாக தி. வேல்முருகன், காங்கிரஸ் கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் செய்தனர். இரண்டு இரவாக போராட்டம் செய்த போது, அவர்களுடன் போராட்டத்தில் விக்ரமன் கலந்து கொண்டார். விக்ரமன் முதல் ஆளாக சென்று நேற்று இரவே கலந்து கொண்டார்.

போராட்டம்

போராட்டம்

பிக்பாஸ் தொடர் சமயத்திலேயே பெண் உரிமை, பெண் விடுதலை, சமத்துவம் குறித்த பல்வேறு கருத்துக்களை வலிமையாக பேசி இருக்கிறார். அதேபோல் பிக்பாஸ் தொடருக்கு வெளியிலும் இவர் இது போன்ற கருத்துக்களை வைத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் விக்ரமன் நேற்று போராட்டத்தில் பெண்களோடு அமர்ந்து கலந்து கொண்டார். அந்த பெண்களின் குறைகளை கேட்டறிந்தார். பாலியல் தொல்லை செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கே இருந்த போலீசாரிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை

கோரிக்கை

பெண்கள் மட்டும் போராடிக்கொண்டு இருந்த நிலையில் அங்கே போலீசார் பலர் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை பல பெண்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. இவர்களுக்கு அமைப்புகள், சங்கங்கள் எதுவும் உதவி செய்யவில்லை. போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் விக்ரமன் முதல் ஆளாக வந்து இங்கே பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.