ப்ச்.. அந்த ரூல்ஸ் தெரியுமா தெரியாதா? முகத்தை சுளித்த ராயுடு.. மேட்சிற்கு இடையே நடந்த பரபர சம்பவம்

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்றும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு முகத்தை சுளித்து கோபம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

சிஎஸ்கே

இந்த மேட்சில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி வருகிறது. விக்கெட்டுகளை இழந்தாலும் இன்னொரு பக்கம் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி வருகின்றனர். இன்று கான்வே மட்டுமே சிஎஸ்கே அணியில் நிதானமாக ஆடினார். பொதுவாக கான்வே மெதுவாக ஆட கூடியவர். முதல் 10 பந்துகளை மெதுவாக ஆடி அதன்பின் வேகம் எடுக்க கூடியவர். ஆனால் இன்று தொடக்கத்தில் இருந்து கான்வே மிகவும் மெதுவாக ஆடினார். அதோடு பந்து சரியாக பேட்டில் மாட்டாமல் திணறினார். 6 பந்துகள் பிடித்தவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் ஷமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

ருத்துராஜ்

ருத்துராஜ்

ஆனால் அதன்பின் ருத்துராஜ் – மொயின் அலி இரண்டு பேருமே சிக்ஸ் பவுண்டரி என்று அதிரடி காட்ட தொடங்கினார்கள். 17 பந்துகள் பிடித்த மொயின் அலி 4 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று 23 ரன்கள் எடுத்தார். அவரின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்த நிலையில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார். ஆனால் இன்னொரு பக்கம் ருத்துராஜ் கவலையின்றி சிக்ஸ் பவுண்டரி என்று அடித்தார். இந்த சீஸனின் முதல் சிக்ஸ், பவுண்டரியை அடித்தவர் அதிரடியாக ஆடி முதல் அரை சதத்தையும் அடித்தார்.

பேட்டிங்

பேட்டிங்

தற்போது வரை 36 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 75 ரன்களை ருத்துராஜ் எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் அம்பதி ராயுடுவும் வேகமாக ஆடிக்கொண்டு இருந்தார். 11 பந்தில் 1 சிக்ஸ் அடித்த அவர் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஸ்வா லிட்டில் பந்தில் போல்ட் ஆனார். அவர் வீசிய 10.3 பந்தில் ராயுடு திரும்பி பந்தை சிக்ஸ் அடிக்க பார்த்தார். லேசாக நகர்ந்து அவர் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பந்து வைட் போல சென்றது. ஆனால் நடுவர் வைட் கொடுக்கவில்லை.

ராயுடு

ராயுடு

ராயுடு லேசாக நகர்ந்துவிட்டதால் நடுவர் வைட் கொடுக்கவில்லை. இதனால் ராயுடு கோபம் அடைந்து முகத்தை சுளித்தார். ஏன் வைட் கொடுக்கவில்லை என்பது போல முகத்தை சுருக்கி பார்த்தார். பொதுவாக நடுவர் வைட் கொடுக்கவில்லை அதை கேள்வி கேட்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டது போலவே தற்போது வைடிற்கு ரிவ்யூ கேட்கும் விதியும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ரூல்ஸ் ராயுடுவிற்கு தெரியுமா என்று தெரியவில்லை.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.