விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார்
பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் மாயமாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் உள்ளார். இவரது மனைவி தர்ஷனா. சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரம் தங்க, வைர நகைகள் மாயமானதாக தர்க்ஷனா அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பாதாக புகாரில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சமீபத்தில் இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 100 பவுன் நகைகளை வேலைக்கார பெண் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.