அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்: சில கல்லூரிகளுக்கு நிறுத்தி வைப்பு – என்ன காரணம்?

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுரிகளின் 3, 5, 7 செமஸ்டர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் குறிப்பிட்ட சில கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. எந்தெந்த கல்லூரிகளின் முடிவுகள் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. 1.விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2.மேலும் விடைத்தாள் திருத்த வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை … Read more

Amala Paul: அடங்க மாட்டாங்க போல… பிகினி உடையில் கடற்கரையில் செம்ம ஆட்டம் போட்ட அமலா பால்!

மலையாள சினிமாவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அமலா பால் தமிழில் வீர சேகரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெளியான மைனா திரைப்படம் நடிகை அமலா பாலுக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. Rajinikanth, Ajith: கதையை மாற்ற சொன்ன ரஜினி… இயக்குநரின் பிடிவாதத்தால் சிக்கி சின்னபின்னமான அஜித்! தொடர்ந்து விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்ட அமைச்சர்

 அரசாங்கத்தின்  வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிவாரணம் வழங்க நடவடிக்கை  அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பில் உள்ளனர், மற்ற 90 சதவீத அரசு ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை. எனவே, அரசின் வருமான ஆதாரம் அதிகரித்தால், அரசுக்கு … Read more

Bloddy Sweet லோகேஷ் கனராஜ்! வங்கி ஊழியர் டூ பான் இந்தியா இயக்குநர்! சாதித்தது எப்படி?

கோயம்புத்தூர் காரரான லோகேஷ் கனகராஜ் படித்து முடித்துவிட்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது கார்ப்பரேட் குறும்பட போட்டியில் அவர் கலந்து கொண்டு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தை நடுவராக வந்த கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பிரம்மித்துள்ளார். உடனே லோகேஷை நேரில் அழைத்து படங்களை இயக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.  கார்த்திக் சுப்புராஜின் பேச்சால் ஈர்க்கப்பட்ட லோகேஷ் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். 2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 5 குறும்படங்களை கொண்டு உருவான அவியல் படத்தில் … Read more

பெண்ணின் காதில் கேட்ட குரல்… நம்பி வாங்கிய லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்கப் பெண் ஒருவர் வீட்டுக்காக மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர் காதில் ஒரு சத்தம் கேட்டதாம். அந்த சத்தத்தின்படி அவர் செய்ததால் இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார்.  பெண்ணின் காதில் ஒலித்த சத்தம் வட கரோலினாவைச் சேர்ந்த Wendy Hester, மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.அப்போது யாரோ அவர் காதில், ’லொட்டரி வாங்கு’ என கூறியதுபோல் இருந்ததாம் உடனே அவர், 8 பவுண்டுகள் கொடுத்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார். பிறகு Wendyக்கு அந்த லொட்டரியில்ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு … Read more

வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாநில அரசை கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரித்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவின் செயல் கண்டனத்துக்குரியது என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.

தங்கக்கடன் மோசடி வழக்கில் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தங்கக்கடன் மோசடி வழக்கில் தொடர்பாக கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு சென்னை ஐகோர்ட் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக் சிரியன் வங்கியின் பாரிமுனை, கோடம்பாக்கம், ராயப்பேட்டை கிளை மேலாளர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

போபால் விஷவாயு விபத்தில் கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: போபால் விஷவாயு விபத்தில் கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளிப்படி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1984-ம் ஆண்டு போபால் விஷவாயு விபத்தில் 3,000 பேர் உயிரிழந்தது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்க, யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் வாரிசு நிறுவனங்களிடமிருந்து கூடுதலாக ரூ.7,844 கோடி வழங்கக் கோரிய உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ‘1995 ஆம் ஆண்டு தொடங்கி … Read more

தேனி: இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

தேனி அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய்வேஷம் போடும் பதவிவெறி பழனிசாமியே அ.தி.மு.கவை … Read more