#சென்னை | கிருஸ்துவ சபை கூட்டத்தால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்! கடும் போக்குவரத்து நெரிசல்!

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையின் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து சுமார் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மாலை இந்த கூட்டம் முடிந்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. குறிப்பாக இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. … Read more

இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!!

இளம்பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த 7ஆம் தேதியில் இருந்து காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமதுகான் காவல்துறையில் புகார் அளித்தார். தனது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என்று அவர் புகார் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி … Read more

“தேர்தல் ஆணையத்துக்கு, ஒவ்வொரு தேர்தலுமே `அக்னி பரீட்சை'தான்!" – தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலோடு, 400 தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறது. இதில் 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 16 ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும் அடங்கும். இந்திய தேர்தல் ஆணையம் அதைத் தொடர்ந்து, தற்போது வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடும்விதமாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது குழுவுடன் … Read more

சோதனைகள், வேதனைகளை எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறார் கே.பழனிசாமி: ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை: ”சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி கொண்டு இருக்கிறார் கே.பழனிசாமி” என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட சார்பில், கழக வளர்ச்சி பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவில்லத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி உதயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, நீதிபதி, கருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்.பி உதயகுமார் … Read more

தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், “திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பை இழிவுபடுத்திய எடப்பாடி; வீடியோ வைரல்.!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, தான் கருணாநிதியின் மகன் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, திமுக தலைவர் முக ஸ்டாலினையும், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. … Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர் வீழ்ச்சியுடன், எரிபொருள் இறக்குமதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை குறையும் விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக … Read more

இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்..!

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினான். 2 பேரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கைதான வில்லாலோபோஸ்-ஐ (Villalobos ) போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவனது கை, கால்களில் போடப்பட்டிருந்த விலங்குகளை அகற்றினர். உடனே அங்கிருந்து தப்பியோடிய வில்லாலோபோஸை, 2 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசார் கைது செய்தனர். Source link

லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில், புகைபிடித்ததாக அமெரிக்கர் மீது வழக்குப்பதிவு

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளிடம் தவறாக நடந்துகொண்டது மற்றும் குளியலறையில் புகை பிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமாகாண்ட் என்ற பயணி வந்துள்ளார். குளியலறையில் அவர் புகை பிடித்தபோது அலாரம் அடித்ததையடுத்து விமான பணியாளர்கள் அவரிடம் இருந்து சிகரெட்டை பிடிங்கி வீசி, இருக்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க … Read more

அபாரமாக ஆடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள்: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி

 இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையிலுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக நடக்கும் இப்போட்டியில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார்கள். @cricbuzz முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (rohit sharma) அபாரமாக விளையாடி … Read more