இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சிகள் ஆரம்பம்


இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10 ஆவது பதிப்பு ஏப்ரல் 3 ஆம்
திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக இரண்டு
நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இந்திய கடற்படையை ஐ.என்.எஸ் கில்தான் மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி என்பன
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

இதேவேளை இலங்கை கடற்படையை விஜயபாகு மற்றும் சமுத்ரா ஆகிய கப்பல்கள்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

அத்துடன் இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர், டோர்னியர் கடல் ரோந்து
விமானம், இலங்கை விமானப்படையின் டோர்னியர் மற்றும் பெல் 412 உலங்கு
வானூர்திகளும் இந்த பயிற்சியில் பங்கேற்கும்.

சிறப்பு படைகளும் உள்ளடக்கம்

இந்திய - இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சிகள் ஆரம்பம் | India And India Sea Based Training

இந்தப் பயிற்சியில் இரு கடற்படைகளின் சிறப்புப் படைகளும் இணைந்து பங்கேற்கும்.

கடல்மட்ட பயிற்சிகளில், வான் எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள்,
கடல்சார் மதிப்பீடுகள், உலங்கு வானூர்தி மற்றும் கடல் ரோந்து விமான
நடவடிக்கைகள், முன்கூட்டிய தந்திரோபாய சூழ்ச்சிகள், தேடுதல், மீட்பு
மற்றும் கடலில் சிறப்புப் படை நடவடிக்கைகள் போன்றவை உள்ளடங்குகின்றன.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.