கனடாவில் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயர் மக்கள்: புதிய தகவலை வெளியிட்ட அதிகாரிகள்


கனடா – அமெரிக்க எல்லையில் இந்த வாரம் St.லாரன்ஸ் நதியில் இருந்து 8 புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம்

இந்த விவகாரம் தொடர்பில் கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் Akwesasne Mohawk பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயர் மக்கள்: புதிய தகவலை வெளியிட்ட அதிகாரிகள் | Lawrence River 8 Bodies Authorities Identify Credit : THE CANADIAN PRESS

வியாழன் அன்று, சதுப்பு நிலப்பகுதியில் ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை Akwesasne Mohawk பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை ஒரு பெண் மற்றும் குழந்தையின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இதில் ஒரு குழந்தை கனேடிய குடிமகன் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட எஞ்சியவர்கள் ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இதனிடையே, சம்பவயிடத்தில் இருந்து மாயமானதாக கூறப்படும் 30 வயது கேசி ஓக்ஸ் என்பவருக்கும், சடலமாக மீட்கப்பட்டுள்ள 8 புலம்பெயர் மக்களுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக இதுவரை பொலிசார் உறுதி செய்யவில்லை.

80 பேர்கள் சட்டவிரோதமாக

சம்பவம் நடந்த பகுதியானது ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் நியூயார்க் மாகாணத்திற்கு இடைப்பட்ட பகுதியாகும்.
மக்கள் அதிகமாக இப்பகுதியை பயன்படுத்தி, சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயற்சி மேற்கொண்டு வரும் பகுதி எனவும் கூறப்படுகிறது.

கனடாவில் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயர் மக்கள்: புதிய தகவலை வெளியிட்ட அதிகாரிகள் | Lawrence River 8 Bodies Authorities Identify Credit : THE CANADIAN PRESS

மட்டுமின்றி, கடந்த ஜனவரி மாதம் முதல் 40 வெவ்வேறு சம்பவங்களில் சுமார் 80 பேர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்றது பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலானோர் இந்திய அல்லது ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.