பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்… இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன்


தென் லண்டனில் பிளாக்ஹீத் பகுதியில் பேருந்து ஒன்றில் 16 வயது இளைஞன் கத்தியாக் குத்தப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்திக்குத்து சம்பவம்

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 4.20 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன் | Blackheath Stabbing Boy Rushed Hospital Credit: mylondon

இதனையடுத்து மாநகர பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவயிடத்தில் வரவழைக்கப்பட்டனர்.
முதலுதவியை அடுத்து, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிருக்கு ஆபத்தில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள லீ ஹை சாலையில் பேருந்தில் நடந்த வாக்குவாதம் ஒன்றிலேயே இளைஞர் கத்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை 

மேலும், பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், கைது நடவடிக்கை முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன் | Blackheath Stabbing Boy Rushed Hospital Credit: mylondon

பொலிசார் வெளியிட்ட தகவலில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.