மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை… சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Covid Vaccines In Tamil Nadu: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. 

எனவே, அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

தனியார் மருத்துவமனையில்…

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பரமனியம்,”தற்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதால், மாநில அரசுகளுக்கு அனுப்புவதையும் நிறுத்திவிட்டது. இதனால், கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என்பது தமிழக அரசு மருத்துவமனையில் இருப்பு என்பது இல்லை. தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால் அதனை போட்டுக்கொள்ளலாம். 

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் தற்போது 2 சதவிகித ரேண்டம் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு, 8 முதல் 10 கொரானோ பாதிப்பு கண்டறியப்படுகிறது. அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு…!

ஆனால், அனைவரையும் பரிசோதிக்கும் வகையில் இதுவரை ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 90 சதவிகிதம் உள்ளதால் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. 

அதே சமயத்தில் தேவையான அளவிற்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும்  ஊரடங்கு என்பது தற்போது இல்லை” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.