பாட்னா: ராகுல் தகுதி நீக்கம் குறித்து பீகார் சட்டப்பேரவையில் பேசிய துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ்,’ காலம் உரிய பதில் அளிக்கும். அப்போது அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என் தந்தை ரயில்வே அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த வழக்கில் நான் சேர்க்கப்பட்டேன். அப்போது அரசியலில் ஈடுபடும் வயதைக்கூட நான் எட்டவில்லை. அந்த வழக்கில் இப்போது எனது வீடு, எனது சகோதரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ராகுல் காந்தி இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதை பற்றி மிகவும் எளிதாக கூறலாம். காலம் எல்லாவற்றிக்கும் பதில் அளிக்கும். காலச் சக்கரம் சுழலட்டும். அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.