சென்னை : இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் துவங்கப்பட்ட வணங்கான் படத்தின் சூட்டிங் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
சூர்யா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து விலகிய சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். பாலாவும் வணங்கான் படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்குநர் பாலா 18 ஆண்டுகள் கழித்து வணங்கான் படத்தின்மூலம் இணைந்திருந்தனர். இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியை சுற்றியுள்ள இடங்களில் 35 நாட்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் காரணம் எதுவும் கூறாமல் திடீரென நிறுத்தப்பட்டது.

நிறுத்தப்பட்ட வணங்கான் படம்
படத்தின் சூட்டிங்கின்போது சூர்யா மற்றும் பாலா இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படத்த்ன் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாலா மற்றும் சூர்யா தரப்பு இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக பாலா தெரிவித்தார். இதையடுத்து இந்தப் படம் மீண்டும் துவங்குமா யாரை வைத்து பாலா வணங்கான் படத்தை எடுப்பார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.

அருண் விஜய் -பாலா காம்பினேஷன்
இதனிடையே நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் படத்திற்காக இணைந்துள்ளார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் துவங்கப்பட்டு தற்போது முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் அருண் விஜய்க்கு ரோஷினி பிரகாஷ் நாயகியாகியுள்ளார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்
படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா இணைந்துள்ள நிலையில், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 17ம் தேதி திருவண்ணாமலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து படத்தை ரிலீஸ் செய்ய பாலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணங்கானில் இணைந்த அருண் விஜய்
முன்னதாக சூர்யா விலகினாலும் வணங்கான் படம் வேறு ஒரு ஹீரோவுடன் துவங்கப்படும் என்று அறிவித்ததற்கு ஏற்ப, தற்போது படத்தின் சூட்டிங்கை அருண் விஜய்யை கொண்டு துவக்கி முதல் ஷெட்யூலையும் முடித்துள்ளார் பாலா. முன்னதாக வணங்கான் படத்தில் நடித்துவரும் அருண் விஜய், தாடியுடனும், வேட்டி சட்டையுடனும் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கெட்டப்பை பார்த்த ரசிகர்கள், பாலாவிற்கு இந்தப் படம் சிறப்பான கம்பேக்காக அமையும் என்றும் அருண் விஜய்க்கும் கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.