இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. மே மாதம் எப்படி தாக்குப்பிடிக்கப்போகிறோம் என்று மக்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பெரும்பாலான வெப்பம் அதிகமாக இருக்கும்.
தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.
பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in