தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை – சேலம் இடையேயான மெமு ரயில் சேவை ஒரு மாதம் நிறுத்தப்படுகிறது.
நடுத்தர குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ரயில் போக்குவரத்து. குறைந்த செலவில் விரைவில் பயணம் மேற்கொள்ள ரயில் சேவை மிக முக்கியவையாக இருக்கின்றன.
இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை – சேலம் இடையேயான மெமு ரயில் சேவை ஏப்ரம் மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை, திருப்பூர் வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் கோவையில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் மெமு ரயில் (வண்டி எண் : 06802, 06803) ஏப்ரல் மாதம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in