இளம் வயதினரை குறி வைக்கும் மாரடைப்பு மரணங்கள்..!!

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள போடா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லகாபதி. இவரது மனைவி வசந்தா. விவசாயம் செய்து வரும் இந்த தம்பதிக்கு அன்னு என்ற மகனும், ஸ்ரவந்தி (13) என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரவந்தி அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரவந்தி விடுமுறையையொட்டி தனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடியுள்ளார். பிறகு அவர் வீட்டிற்கு சென்று அங்கு தனது தாத்தா பாட்டியுடன் படுத்துள்ளார்.

அப்போது திடீரென சிறுமி நள்ளிரவு 12.30 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அப்போது தனது பாட்டியை எழுப்பி மார்பு பகுதியில் வலிப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்தில் சிறுமிக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சிறுமி மயங்கினார்.

பின்னர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினர். உடனே சிறுமிக்கு சிபிஆர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இளம் வயது தற்கொலை மரணங்கள் தற்போதைய சூழல் அதிகரிப்பது சமூகத்தில் பீதியை உருவாக்கியுள்ளது. அதிலும் 13 வயது சிறுமி மாரடைப்பால் இறந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

இது போல் இளம் வயதினர் மாரடைப்பால் இறப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட காரைக்குடியில் கல்லூரி மாணவன் ஆண்டு விழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.