மும்பை : நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்டவர்களுடன் அவர் நடித்திருந்த படங்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகின.
அடுத்ததாக பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கேஜிஎப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ருதிஹாசன். தன்னுடைய காதலருடன் நெருக்கமான வீடியோக்களை அடுத்தடுத்து பகிர்ந்து வருகிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாகவும் நடிகையாகவும் உள்ள ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர், பாடகி என பன்முகம் காட்டி வருகிறார். தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்திருந்த ஏழாம் அறிவு படம் அவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்த நிலையில், தொடர்ந்து சூர்யா, அஜித், விஜய், விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
மீண்டும் படங்களில் பிசியான ஸ்ருதி
இதனிடையே சில காரணங்களால் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிய ஸ்ருதிஹாசன், தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டில் வெளியான உன்னைப் போல ஒருவன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஸ்ருதிஹாசன், தொடர்ந்து ஸ்டைலிஷ்ஷான டோனில் பாடல்களை பாடியுள்ளார். இந்த வகையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ஸ்ருதி.
அடுத்தடுத்த தெலுங்குப் படங்கள்
சில காலங்கள் நடிப்பில் சிறப்பாக செயல்படாமல் இருந்த ஸ்ருதி நடிப்பில் தெலுங்கில் அடுத்தடுத்து வால்டர் வீரய்யா, வீரசிம்ஹ ரெட்டி என சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து கேஜிஎப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாசுடன் இணைந்து சலார் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதலருடன் கூடுதல் நெருக்கம்
இதனிடையே சாந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரில் உள்ள ஸ்ருதி, அவருடன் மிகவும் நெருக்கமான வீடியோக்கள், புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சாந்தனுவுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இரு தினங்களுக்கு முன்பு ஸ்ருதி பகிர்ந்திருந்த நிலையில், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்ருதியின் பர்ஸ்ட் க்ரஷ்
எப்போதும் தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவும் போல்டாகவும் கூறக்கூடியவர் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் வெர்ஜினிட்டி உள்ளிட்ட கேள்விகளுக்கு கூலாக பதிலளித்திருந்தார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முதல் க்ரஷ் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். நடிகர் புரூஸ் லீ மீதுதான் தனக்கு முதல் க்ரஷ் வந்ததாக அவர் கூறியுள்ளார்.