சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கமாகவே உள்ளது. அதிலும், பெரும்பாலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையே காணமுடிகிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கம் விலையானது ஏற்ற, இறக்கம் பெறுகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத்தங்கம், ஒரு கிராம் 50 ரூபாய் விலை உயர்ந்து, 5680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு சவரன் 400 ரூபாய் விலை அதிகரித்து, 45440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் விலை உயர்ந்து 81.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
newstm.in