ஐதராபாத் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விடுதலை படம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் சில மாதங்களில் திரையிடப்பட உள்ளநிலையில் இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
விடுதலை படம் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விடுதலை. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நாயகியாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் காட்டு மல்லி உள்ளிட்ட பாடல்கள் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இரண்டு பாகங்களாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் சிறப்பான வசூலை பெற்றுள்ள நிலையில், இன்னும் 4 மாதங்களில் படத்தின் இரண்டாவது பாகத்தையும் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களே பாக்கியுள்ள நிலையில், விரைவில் சூட்டிங்கை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்திலும் வெற்றிமாறன் இணையவுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி, நாயகனாக களமிறங்கிய நிலையில், துவக்கத்தில் இதுகுறித்து ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் தன்னுடைய கேரக்டரை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார் சூரி. குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கேரக்டரில் அவரைத்தவிர யாரும் சிறப்பாக பொருந்திவிட முடியாது என்ற விமர்சனத்தை அவர் பெற்றுள்ளார். இதேபோல வாத்தியார் கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கும் இது கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இன்றைய தினம் விடுதலை படம் தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள சூரி, விடுதலை படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ்களில் சூரி, பவானி ஸ்ரீ, வெற்றிமாறன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வெற்றிமாறன், படத்தின் காட்சிகளை விவரிக்கும்வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. எப்போதுமே திரையில் காணும் ஒரு காட்சிக்காக எவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும் என்பதை இத்தகைய மேக்கிங் காட்சிகள் விவரித்துவிடும். அதே அனுபவத்தையே இந்தப் புகைப்படங்கள் கொடுத்துள்ளன.