சியோல்,- தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த வட கொரிய ரோந்து படகை, தென் கொரிய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டிஅடித்தனர்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் பேக்ரியோங் தீவிற்கு அருகே, வட கொரியாவின் ரோந்து படகு எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்தது.
இதைப் பார்த்த தென் கொரிய கடற்படையினர், துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து அந்த ரோந்து படகு அங்கிருந்து பின்வாங்கியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து வரும் அத்துமீறல்களை தென் கொரியா கூர்ந்து கவனித்து வருவதுடன், தொடர்ந்து ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
சமீபகாலமாக தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி தரும் விதமாக வட கொரியா பல்வேறு வகையான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது.
Advertisement