
பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுகவில் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் 10 நாள் அவகாசம் வழங்கியிருந்த நிலையில், நாளை தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்துகிறது.
பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுகவின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக தரப்பில், “கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பத்து நாள் அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை வழங்குவதாக கூறினார்.
இந்த அவகாசம் வருகிற 22ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஆனூப் சந்திர பாண்டே, ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
newstm.in