சாப்பாடு ருசியாக இல்லை எனக்கூறி மனைவியை, கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் தேவ்காட் என்ற ஊரில், ராம் சஜீவன் கோல் – நவ்மி தம்பதியினர் வசித்து வந்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.
மதுவுக்கு அடிமையான ராம், தினமும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், கணவர் வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பாடு கேட்டுள்ளார்.
பின்னர் சாப்பாடு ருசியாக இல்லை எனக்கூறி, அவர் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். சண்டை தீவிரம் அடைந்ததை அடுத்து, ஆத்திரம் அடைந்த கணவர் ராம், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான கணவர் ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in