தமிழகத்தில் இன்று புதிதாக 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், கோயம்புத்தூரில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும், சேலத்தில் 34 பேருக்கும் இன்றைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3676 ஆக உயர்ந்துள்ளது.
இது நேற்றைய எண்ணிக்கை விட 16 மட்டுமே கூடுதல். இதற்கு காரணம் தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தொற்றால் குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று மற்றும் குணமடையோரின் இடையேயான விகிதாச்சாரம் ஏறக்குறைய சமமாக உள்ளது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார்.