அப்படி இருக்கும்போது, குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை தாங்களே கற்றுக்கொள்வார்கள்’ என்கிறார், சென்னையின் முதல் பிரத்யேக டிசைன் கல்லூரியான டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்-ன் நிறுவனர் & தலைவரான ஏ.ஆர். ராம்நாத். டிசைன் துறை பற்றியும், கல்விமுறை குறித்தும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கொண்டுள்ள பார்வை ஆழமானது!

வகுப்பறைகள் மட்டுமே மாணவர்களுக்கு முழுமையான கற்றலை வழங்காது. எதையும் நேரில் கண்டு, தொட்டு அனுபவித்து உணர்ந்து கற்கும் பாடமே அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும். அதுவே, மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பதை புரிந்து 80% செய்முறையையும், 20% தியரியையும் கொண்டு பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறது, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்!
இதன் அவசியத்தைப் பற்றி பகிரும்போது, ‘டிசைன் படிப்பு ஏன் அவசியமாகிறது, டிசைன் துறை நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம்’ என்பதையும் சேர்த்தே விளக்கினார், ஏ.ஆர். ராம்நாத்.
டிசைன் என்பது என்ன? அதன் அவசியம்…
எதையும் சரியாகப் புரிந்து, அதிலுள்ள சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதும், அப்புதிய தீர்வுகளை செயல்படுத்தும்போது உண்டாகும் குறைபாடுகளைக் கண்காணித்து, அதற்கேற்ப மேலும் சிறப்பான தீர்வுகளை வழங்குவதும் டிசைனர்களின் வேலை.

எல்லா துறைகளுக்கும் பொதுவானது, ‘டிசைன்’. காலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கும் டூத்பிரஷ்ஷில் தொடங்கி, தினசரி உபயோகிக்கும் எளிய உடைகள், வீட்டு உபயோக சாதனங்கள், புது மாடல் கார்கள் வரை அனைத்திலும் டிசைன் முக்கிய பங்காற்றுகிறது. பயனாளர் வசதி கருதி வடிவமைக்கப்படும் அனைத்திலும் ‘டிசைன்’ அத்தியாவசியமாகிறது.
டிசைனர்களின் தேவை, <25% மட்டுமே பூர்த்தியாகிறது!
‘ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு 10,000 டிசைனர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், வெறும் 2400 பேர் மட்டுமே அதற்கு தகுதியானவர்களாக கிடைக்கிறார்கள். பெற்றோர்கள் & மாணவர்களிடம் டிசைன் துறை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததும், நல்ல டிசைன் கல்லூரிகள் அரிதாக இருப்பதுமே அதற்கு காரணம்’ என்கிறார் ஏ.ஆர். ராம்நாத்.

இந்திய நிறுவனங்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான நல்ல டிசைனர்களின் தேவையை பூர்த்தி செய்வதே, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்-ன் நோக்கம். அதற்காக, அவர்கள் கல்விமுறையில் கொண்டு வந்திருக்கும் புதுமைகள் நம்மை பூரிப்படையச் செய்கின்றன.
கற்றலை வலுப்படுத்த பாடத்திட்டத்தில் ‘டூர்’!
டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன், தங்கள் மாணவர்கள் சிறப்பான கல்வியை பெறுவதற்கு சுற்றுப்பயணம் அவசியம் என்று கருதுகிறார்கள். அதற்காக, DTour என்கிற பயண பாடத்திட்ட முறையை ஏற்படுத்தியுள்ளார்கள். இதன்வழி, மாணவர்கள் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என்கிற எந்தப் பாகுபாடுமின்றி, வடிவமைப்பு குறித்த யதார்த்த உலகத்தை அனுபவிக்க, சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.
‘ஒரு பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ள மும்பை சரியான இடமாக இருக்கும் என்றால் மும்பைக்கும், திருப்பூர் சரியாக இருக்குமென்றால் திருப்பூருக்கும் சென்று, அங்குள்ள சிறந்த டிசைனர்கள் மூலம் பாடம் கற்கிறார்கள். அத்துடன், புதிய கலாச்சாரம், மனிதர்கள், உணவுகள் போன்றவற்றுக்குப் பழகுவதால் மாணவர்களிடம் ‘பச்சாதாபம்(Empathy)’ உண்டாகிறது. அது டிசைன் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான பண்பு’ என்கிறார் அக்கல்லூரியின் தலைவர்.
தொழில்துறைக்கும், மாணவர்களுக்கும் இடையே பாலமாகும் INCO!
கல்லூரிகள், மாணவர்களுக்கு வேலை வாங்கித்தர வேண்டியதில்லை; மாணவர்களைத் திறம்பட உருவாக்கினால் மட்டுமே போதும்! நிறுவனங்கள் தாங்களே முன்வந்து மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள். அதில் தங்களுக்கு விருப்பமான/ உகந்த வாய்ப்பை மாணவர்கள் தேர்ந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு தொழில்துறை தேவைக்கும், கல்லூரி பாடத்திட்டத்துக்கும் இடையிலான இடைவெளி நீங்க வேண்டும்.
எனவேதான், நிறுவனங்களும், தொழில்துறை வல்லுனர்களும், படிக்கும் மாணவர்களோடு சேர்ந்து தங்களின் துறைசார்ந்த சவால்களுக்கு விடைதேடும் ஓர் வாய்ப்பாக, டாட் ஸ்கூலில் INCO (Industrial Connect) என்கிற முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நிறுவனங்கள் தங்களுக்கு சவாலாக இருக்கும் புராஜெக்ட்களை மாணவர்களோடு கலந்தாலோசித்து புதிய தீர்வுகளைப் பெற முடியும். திரைத்துறையினர் தங்கள் ‘கம்யூனிகேஷன் டிசைன்’ தேவைகளுக்கு மாணவர்களை அணுக முடியும்!
மாணவர்களுக்கும், தொழில்துறையினருக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் இந்தப் பாலம், உறவாகப் பலம் பெற்று, இருவருக்குமே சிறப்பான எதிர்காலத்தை உண்டுசெய்யும்.
தொழில்முனைவோர்க்கு துணைநிற்கும் ‘DSparc’!
டிசைன் துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. படித்து முடித்ததும் மாணவர்கள், தனித்தொழில் முனைவோராக (Freelancing) மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும், தாமாகவே தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, தேவையான நிதி உதவிகளையும் பெற்றுத்தர, DSparc என்கிற முன்னெடுப்பையும் முதல்முதலாக கொண்டு வந்துள்ளது, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்!
‘ஆக்கம் செய்யும் சொந்த பிராண்டுகள் உருவாக வேண்டும்’ என்பதே இலக்கு!
‘நம் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் உற்பத்தியையே சார்ந்திருக்கிறது. அது மாற வேண்டும். நம் நாட்டில் ‘ஆக்கம்’ நடைபெற வேண்டும்.
உதாரணமாக, இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையாகும் ஒரு apple iphone-ன் விலையில், 20% மட்டுமே நம் நாட்டிற்கு கிடைக்கிறது. மிச்ச 80% அமெரிக்காவையே அடைகிறது. அதிக உழைப்பு, வேலையாட்கள், வளம் ஆகியவற்றை நம் நாட்டிலிருந்து பெற்றாலும், 20% பணம் மட்டுமே நமக்கு கிடைப்பது என்பது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறவிடாது.

இதற்கெல்லாம் தீர்வு ‘டிசைன்’ கல்வியில் இருக்கிறது. வெறும் உற்பத்தியில் பங்குபெறும் பொறியாளர்களை உருவாக்குவதோடு நில்லாமல், புதிய கோணத்திலிருந்து யோசித்து நிறுவனங்களை வழிநடத்தும், நிறுவனங்களுக்கு வலுசேர்க்கும் தேர்ந்த டிசைனர்களை உருவாக்க வேண்டும். அப்படி நடந்தால், ஆக்கத்தில் கவனம் செலுத்தும் சிறந்த பிராண்டுகள் இந்தியாவில் உருவாகும். அது நம்மை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும்.
அடுத்த 10-15 ஆண்டுகளில், டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் படித்த மாணவர்கள் ஆக்கப்பூர்வமான பிராண்டுகள் நம் நாட்டில் உருவாக காரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு’ என்று தன் பெரும் கனவை விவரமாய்ச் சொல்லி நம்மையும் புல்லரிக்கச் செய்தார், ஏ.ஆர்.ராம்நாத்!
டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் சேர விருப்பமா?
+2 முடித்திருந்தால் போதும். டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் வழங்கும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 4 வருட B.Des பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பணமின்றி பங்கேற்கலாம்!
நுழைவுத்தேர்வுக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் B.Des பட்டப்படிப்பில் கீழுள்ள 4 பிரிவுகளில் உங்களுக்கு பொருத்தமான பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.
B.Des In Fashion Design
B.Des In Industrial Design
B.Des In Interior Design
B.Des In Communication Design
நுழைவுத்தேர்வுக்கு உடனே ரெஜிஸ்டர் செய்ய: https://www.dotsod.in/admission-process/?utm_source=Vikatan_Article&utm_medium=PPC