கல்விக்காக ஹிஜாபை கைவிட்ட தபஸும் ஷேக்… பியூசி தேர்வில் முதலிடம்!

`ஹிஜாபை விட, கல்வியைத் தேர்வு செய்ய முடிவு செய்தேன்’ என 2023 பி.யூ.சி தேர்வில் முதல் இடத்தைப் பிடித்த தபஸும் ஷேக் (Tabssum Shaik) தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 2வது பி.யூ.சி தேர்வு முடிவுகள், 2023 ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகின இந்தத் தேர்வில் 12-ம் வகுப்பு கலைப் பிரிவில் 600 மதிப்பெண்களுக்கு 593 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார் தபஸும் ஷேக். ஹிந்தி, உளவியல் மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். 

ஹிஜாப்

2022-ல் `அனைத்து வகுப்பறைகளிலும் ஹிஜாப் மற்றும் பிற மத ஆடைகளுக்குத் தடை விதிக்கப்படும்’ என பாஜக தலைமையிலான அரசு பிறப்பித்த உத்தரவைக் கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல போராட்டங்கள் நடந்தன.

பள்ளியில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணியாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பல மாணவிகள் ஹிஜாபை அனுமதிக்கும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்தனர்.

அந்தச் சமயத்தில் தினமும் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற தபஸும், கல்விக்காக ஹிஜாப்பை கைவிட முடிவு செய்திருக்கிறார்.

இதனை அவருடைய பெற்றோரும் ஆதரித்துள்ளனர். `நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவது முக்கியம். குழந்தைகளுக்குக் கல்வி மிகவும் முக்கியம்’ என தபஸுமின் தந்தை அப்துல் காம் ஷேக் மகளின் விருப்பத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். 

தன்னுடைய வெற்றியைக் குறித்து தபஸும் கூறுகையில், “நான் ஹிஜாபை (கல்லூரியில்) கைவிட்டு, என் கல்வியைத் தொடர முடிவு செய்தேன்.  கல்விக்காக நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்.

அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றுவேன். கல்லூரி வளாகம் வரை ஹிஜாப் அணிந்திருப்பேன். நாகரத்னம்மா மேதா கஸ்தூரிரங்கா செட்டி ராஷ்ட்ரிய வித்யாலயா பெண்கள் கல்லூரியில், மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்வதற்கு முன், ஹிஜாப்களை கழற்றுவதற்கு பிரத்யேக அறை இருக்கும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது முதலிடம் பிடித்த பின், தன்னுடைய தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றபோது தபஸும் ஹிஜாப் அணிந்திருந்தார். இதனை யாரும் எதிர்க்கவில்லை… 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.