கென்யாவில், கடவுளைக் காண நடுகாட்டில் உண்ணாவிரதமிருந்து பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

கென்யாவில், கடவுளைக் காண்பதற்காக நடுக்காட்டில் சுயவிருப்பத்தின் பேரில் பட்டினி கிடந்து உயிரிழந்த மேலும் 26 பேரின் உடல்களை கென்ய போலீசார் மீட்டு உள்ளனர்.

பட்டினியால் இறப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்ற கொள்கைளை பிரசாரம் செய்து Good News International Church என்ற பெயரில் அமைப்பு நடத்திவந்த மகென்சி என்தெங்கே என்ற போதகரை கைதுசெய்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.