சுட்டெரிக்கும் வெயிலுக்கு லீவு.. கொட்டும் கனமழை.. 11 மாவட்டங்களில் குளு குளு வானிலை!

கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரித்தாலும் அதை தணிக்கும் வகையில்
கனமழை
அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.04.2023 மற்றும் 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

Dscl கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), PWD மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 9, கிண்ணக்கொரை (நீலகிரி), பொன்னனியாறு அணை (திருச்சி), கெட்டி (நீலகிரி) தலா 8, காட்டுமயிலூர் (கடலூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7,

செங்கம் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை) 6, நத்தம் (திண்டுக்கல்), மஞ்சளாறு (தேனி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 6, வேப்பூர் (கடலூர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மூலனூர் (திருப்பூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 5,

செம்மேடு (விழுப்புரம்), பாலவிதிதி (கரூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தொண்டி (ராமநாதபுரம்), கடவூர் (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), மதுரை தெற்கு (மதுரை), கோவில்பட்டி (திருச்சி), அரவக்குறிச்சி (கரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பெரியகுளம் (தேனி), தல்லாகுளம் (மதுரை), பெரியகுளம் AWS (தேனி), விருதுநகர் தலா 4,

பாம்பன் (ராமநாதபுரம்), கெத்தை (நீலகிரி), ஹரூர் (தர்மபுரி), கல்லந்திரி (மதுரை), விருதுநகர் AWS (விருதுநகர்), பிலவக்கல் (விருதுநகர்), தேக்கடி (தேனி), திருத்தணி (திருவள்ளூர்), மேட்டுப்பட்டி (மதுரை), திருத்தணி PTO (திருவள்ளூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), போளூர் (திருவண்ணாமலை), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), செய்யார் (திருவண்ணாமலை), வட்ராப் (விருதுநகர்) தலா 3,

மீ மாத்தூர் (கடலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), கோத்தகிரி (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), மருங்காபுரி (திருச்சி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கோடநாடு (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), உசிலம்பட்டி (மதுரை), மேல் பவானி (நீலகிரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சிவகிரி (தென்காசி), சங்கரன்கோவில் (தென்காசி), வெள்ளகோயில் (திருப்பூர்), திருமங்கலம் (மதுரை), திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வேலூர், மீமிசல் (புதுக்கோட்டை), எறையூர் (கள்ளக்குறிச்சி),

காமாட்சிபுரம் (திண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), வாடிப்பட்டி (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 2, வேடசந்தூர் (திண்டுக்கல்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), குண்டடம் (திருப்பூர்), திண்டுக்கல், முகையூர் (விழுப்புரம்), ஆய்க்குடி (தென்காசி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருச்சிராப்பள்ளி டவுன், பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பார்வூட் (நீலகிரி),

திருவாலங்காடு (திருவள்ளூர்), சத்தியார் (மதுரை), சித்தம்பட்டி (மதுரை), காஞ்சிபுரம், வட்டானம் (ராமநாதபுரம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தீர்த்தநாதபுரம் (ராமநாதபுரம்), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சிறுகுடி (திருச்சி), மண்டபம் (ராமநாதபுரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), புலிவலம் (திருச்சி), தாராபுரம் (திருப்பூர்), ஆனந்தபுரம் (விழுப்புரம்),

அறந்தாங்கி (புதுக்கோட்டை), தென்காசி, திருக்குவளை (நாகப்பட்டினம்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), வைகை அணை (தேனி), வாலாஜா (ராணிப்பேட்டை), வளத்தி (விழுப்புரம்), பென்னாகரம் (தர்மபுரி), ஏற்காடு (சேலம்), டேனிஷ்பேட்டை (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), அம்மூர் (ராணிப்பேட்டை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆழியார் ( கோயம்புத்தூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.