பிரித்தானிய நடிகர் 47 வயதில் அகால மரணம்!


பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் டேல் மீக்ஸ் தனது 47வது வயதில் உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலம்

கடந்த 2003 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு இடையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் டேல் மீக்ஸ்.

சைமன் மெரிடித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் ரசிகர்ளை கவர்ந்தார்.

இந்த நிலையில் டேல் மீக்ஸ் தனது 47 வயதில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீக்ஸின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பேஸ்புக்கில் எழுதியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

டேல் மீக்ஸ்/Dale Meeks 

உறுதிப்படுத்தப்படாத மரணத்திற்கான காரணம்

ஆனால் டேல் மீக்ஸ் மரணத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், ‘நம்ப முடியாத அளவுக்கு வருத்தமாக உள்ளது. சிறந்த நண்பன், உனது ஆத்மா சாந்தியடைய வேண்டும் டேல் மீக்ஸ். சிரிப்பு குறைந்து விட்டது; அதனை பகிர்ந்துகொள்ள நீங்கள் இல்லை.

நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து அழகான செய்திகளுக்கும், நினைவுகளுக்கும் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

டேல் மீக்ஸ்/Dale Meeks @ITV

அதேபோல் மீக்ஸின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கருத்துப் பிரிவில் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியை ‘நம்ப முடியாத சோகம்’ என குறிப்பிட்டு பகிர்ந்துகொண்டனர்.  

டேல் மீக்ஸ்/Dale Meeks

டேல் மீக்ஸ்/Dale Meeks @ Twitter/@BenMundy44Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.