மூன்று பௌத்த துறவிகளின் கொடூரச் செயல் அம்பலம்


8 வயது பௌத்த துறவி ஒருவர் மூன்று துறவிகளால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.  

துறவறம் பூண்டு 45  நாட்களேயான இந்த சிறிய பௌத்த துறவி மந்திரத்தினை சரியாக உச்சரிக்காத காரணத்தினால் இவ்வாறு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துன்புறுத்தல்களுக்கு உள்ளான இந்த எட்டு வயதுடைய பௌத்த துறவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மிகக் கொடூர வன்முறைகள்

மூன்று பௌத்த துறவிகளின் கொடூரச் செயல் அம்பலம் | Child Abuse Sri Lanka

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துறவி பௌத்த பூஜையின் போது சொல்லி கொடுக்கும் மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியுள்ளதாகவும், இதனால் சினமுற்ற மூன்று துறவிகளும் இணைந்து விகாராதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுநீரை போத்தலில் கொண்டுவந்து அருந்தச் செய்தும், தேசிக்காயினை தரையில் பிழிந்து நாக்கினால் நக்குமாறும், தும்பு தடி முறியும் வரை தாக்கி கன்னத்தில் அறைந்தும், மான் கொம்பு மற்றும் கத்தரிகோலினால் உடம்பில் குத்தியும் சித்திர வதை செய்துள்ளனர்.

இதனால் பற்கள் உடைந்தும், உதடுகள் காதுகள் கிழிந்தும், உடலில் பல இடங்களிலும் குறித்து 8 வயதான பௌத்த துறவி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுபின்னர் மேலதிக சிகிச்சைக்காக 22 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காயமுற்ற துறவியின் தந்தை மற்றும் பெரிய தந்தை ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.