ஹெலிகாப்டர் இறக்கையில் சிக்கி அதிகாரி பலி | The officer died after getting stuck in the wing of the helicopter

உத்தரகண்ட்: உத்தரகண்டில் ஹெலிகாப்டரின் இறக்கை தாக்கியதில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உத்தரகண்டில் விமான போக்குவரத்துத்துறை மேம்பாட்டு ஆணைய நிதித்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் அமித் சைனி, 35.

இமயமலையில் உள்ள கோவில்கள் திறக்கப்பட உள்ளதையடுத்து, கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களில் ஹெலிகாப்டர் சேவைகள் மேற்கொள்வதற்காக ஹெலிபேடுகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

இக்குழுவில் இருந்த சைனி, கேதார்நாத்தில் உள்ள ஹெலிபேடில் ஆய்வை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் ஏறச்சென்றார்.

அப்பொழுது, ஹெலிகாப்டரின் பின் பக்கத்தில் உள்ள இறக்கை, சைனி மீது தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.